வேலூர்=12
வேலூர் மாவட்டம் ஸ்ரீ சக்தி அம்மா அருளாசியுடன் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் 11.01.2025 அன்று வியைாட்டு தின விழா நடைப் பெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக விளையாட்டுத் துறை நிர்வாக அலுவலர் முனைவர் ஏ.பாலமுருகன் மற்றும் மூத்த இந்திய கிரிக்கெட் வர்ணணையாளர் ரவிசதுர்வேதி அவர்களும் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள் மற்றும் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். முனைவர் எம்.சுரேஷ்பாபு தாளாளர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளிகளின் முதல்வர்கள் கே.சுப்பிரமணி மற்றும் லட்சுமி ஆகியோர் பங்குபெற்றனர். முனைவர். ச.ரமேஷ் தலைமை ஆலோசகர் வாழ்த்துரை வழங்கினார். விளையாட்டு தின விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் துணை முதல்வர்கள், அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் மற்றும் வெளிநாட்டுவாழ் பக்தர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவினை நிர்வாக அலுவலர் ஆதிகேசவன் ஏற்பாடு செய்து இருந்தார்.