கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு தினத்தை முன்னிட்டு கல்லூரியின் முதல்வரும் சேர்மேனுமான அருள் தலைமையில் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்கள் கொடியசயத்து ஒலிம்பிக் தீபமேந்தி கல்லூரி மைதானத்தில் ஊர்வலமாக வந்தனர். வாலிபால் உள்பட பல் வேறு விளையாட்டுகள் மாணவர்கள் விளையாடினர். இதில் சிறப்பு அழைப்பாளராக
அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் நிறுவனர் தென்னரசு கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவியர் இடையே சிறப்புரையாற்றினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.