கரூர் மாவட்டம் – செப்டம்பர் – 12
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கியுள்ளது..
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 -ம் ஆண்டிக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம் (குளித்தலை) இளங்கோ (அரவக்குறிச்சி) க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலை வசித்தனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களின் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவு களில் மாவட்ட அளவில் 27 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 53 வகையான போட்டிகளும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது
அதன்படி கரூர் மாவட்டத்தில் வருகிற 23 -ந்தேதி வரை பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன .
மாவட்ட அளவிலான இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு, ஏற்பட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு சங்கங்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது பிரிவை சேர்ந்த 17,574 பேர் இளையதளத்தில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்தில் 854 முதலிடம், 854 இரண்டாமிடம், 854 மூன்றாமிடம் , மண்டல அளவில் 112 முதலிடம் , 112 இரண்டாமிடம் , 19 மூன்றாமிடம் வழங்கப்பட்ட உள்ளது.
மாவட்ட அளவிலான பரிசுத்தொகை முதலிடம் பெறுபவருக்கு ரூ. 3 ஆயிரமும் , இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ.2 ஆயிரமும் மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ.1ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை வெற்றி பெறுபவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மாவட்ட அளவில் சேர்ந்தெடுக்கப்படும் அணிகள்
மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்கள். தனி விளையாட்டு போட்டிகளிலும் முதல் இடத்தை பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்கள். மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு ரூ 1 லஞ்சமும், இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ.75 ஆயிரும், மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ.50 ஆயிரும் வழங்கப்படும்.
இதையடுத்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ – மாணவிகளுக்கான மருத்துவ குழுவினர், அவசர கால ஊர்தி, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் உடற்கல்வி, ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.