ஜனவரி27
ஓம் அகத்தியர் ஆதீனம் ஓம் அகத்தியர் அம்மையப்பன் முதியோர் இல்லம் அறக்கட்டளை மற்றும் சாது சன்னியாசிகள் சார்பில் ஓம் ஆதி சர்வ சித்தர்கள் மாநாடு சனாதன தர்ம ஆன்மீக எழுச்சி மாநாடு உலக நலன் வேண்டி 108 மகா யாக வேள்வி அஸ்வமேத்தா ராஜ சூரியா மகா கேள்வி விழா ஆகிய முப்பெரும் மாநாடு விழா திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி மஹாலில்25-1-2025 காலை தொடங்கியது.
மாநாட்டிற்கு கங்க புத்தரன் மதியழகன் சாமிகள் தலைமை வகித்தார். வீரபோக வசந்தராயர் கல்கி மகான் மகாலட்சுமி சாமிகள்,
ஸ்ரீவெள்ளைச்சாமி சாமிகள் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், டி.கே.டி.நாகராஜ், மக்கள் சேவகர் சூர்யா செந்தில்ஆன்மீக நெறியாளர் டாக்டர் ஜெய்லானி, மாநாட்டு செயலாளர் முருகேசன் என்கின்ற அண்ணாச்சி, ஆடிட்டர் மலர்விழி, உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டை ஒட்டி துவங்கப்பட்ட மாநாடு
காலை 4-30 மணிக்கு கணபதி ஹோமம், 7மணிக்கு அஸ்வமேத்தா ராஜ சூரிய பூஜை. சிவபுராணம், திருவாசகம், திருமுறைகள் விண்ணப்பம், காவி கொடி ஏற்றுதல் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு சித்தர்களின் வாழ்க்கை முறை. சித்தர்களின் மருத்துவ முறை, ஆன்மீக எழுச்சி உரை பட்டிமன்றம் நடைபெற்றது.
மாலை அபிஷேக 4 மணிக்கு பூஜைகள் 108 மகா யாக வேள்வி, கொல்லிமலை பச்சை மூலிகைகளை கொண்டு யாக வேள்வி, ஒரு லட்சம் ருத்ராட்ச கிரிவலம், மகா தீபாராதனை நடக்கிறது.
இரவு 9மணிக்கு சிறப்பு வாய்ந்த கொங்கு மண்டல. பாரம்பரிய செல்வ விநாயகர் வள்ளி கும்மி கலைஞர் குழு நடனம் நடைபெற்றது.
இரண்டாம் நாள் 26-ந்தேதி காலை 6மணிக்கு அஸ்வமேத்தா ராஜ சூரிய மகா யாக பூஜை. சிவபுராணம், திருவாசகம்,
திருமுறைகள் விண்ணப்பம் செய்து தமிழ்தாய் வாழ்த்து தேசிய கீதம் பாடி தேசிய கொடி ஏற்றுதல் நடக்கிறது.
காலை 9-30மணிக்கு சித்த மருத்துவ விளக்கவுரை, ஆன்மீக எழுச்சி உரை நடைபெறுகிறது. காலை 10- 30மணிக்கு மடாதிபதிகள், நித்த அன்னதானம் செய்பவர்கள். ஆன்மீக நிகழ்ச்சி செய்பவர்கள். திருவாசக் முற்றோர்கள் செய்பவர்கள். உழவாரப்பணி செய்யவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை என்னும் அன்னதான விழா பஞ்சதான விழா நடக்கிறது.
மதியம் 3மணிக்கு அகத்தியர் 18 சித்தர் ஆன்மீக பாடல் பானு குழுவின் மாஸ் ஆர்கெஸ்ட்ரா நடக்கிறது. முடிவில் மாநாட்டு செயலாளர் நன்றி கூறுகிறார். இறைபணி சான்றிதழ்களை கங்கா புத்திரன் மதியழகன் சுவாமிகள், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம், திருப்பூர் மாநகர் கே.வி.ஆர். காவல்உதவி
ஆணையாளர் செங்குட்டுவன் வழங்கினார்.