தஞ்சாவூர் ஜூலை 20.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி வருகிற 30-ஆம் தேதியும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளையொட்டி 31 தேதியும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் தனித்தனியாக நடைபெற உள்ளது. போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூபாய் 5 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூபாய் 3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் 2 ஆயிரமும் வழங்க ப்படும். பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியின் பங்குபெறும் மாணவர்களில் அரசு பள்ளி மாண வர்கள் 2 பேரை மட்டும் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவரு க்கும் சிறப்பு பரிசுகள் தொகையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் படிக்கும் மாணவர்கள் (ஒரு பள்ளிக்கு ஒருவர், ஒரு கல்லூரிக்கு 2 பேர் ) இந்த போட்டியில் பங்கேற்கலாம்
போட்டி நடைபெறும் இடம், தேதி, தலைப்பு ,விதிமுறைகள் ஆகிய வை பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்கு தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர், கல்லூரி கல்வி இணை இயக்குனர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும் மேற்கொண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.