இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை.
அரியலூர்,நவ.18:
அரியலூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தர்.
அக்கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் டி.தண்டபாணி தலைமையில், ஒன்றியச் செயலர் து.பாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.சிவக்குமார், பிச்சைப்பிள்ளை பெ.பார்த்திபன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பெரும்பாலும் பயிற்சி மருத்துவர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர். அனுபவிக்க சிறப்பு மருத்துவர்கள் இருப்பதில்லை. இதனால் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுபவிக்க சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை (டாஸ்மாக்) அகற்ற வேண்டும்.
அரசு மருத்துவமனை அருகேயுள்ள பெரம்பலூர் சாலை மேம்பாலத்தின் கீழே இருபுறமும் முழுமைப்பெறாமல் உள்ள அணுகுச் சாலையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற நாகமங்கலம் ஊராட்சி மேல்நிலைநீர் தேக்கத்தொட்டி இயக்குநர் எஸ்.வி. பிச்சைப்பிளைக்கு பணிக் காலத்தில் வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை ரூ.58,460 யை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்