கன்னியாகுமரி மார்ச் 15
குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை அடுத்து மிகவும் பிரசித்தி பெற்ற காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்தில் நேற்று மந்திராலய குரு நாமரிஷி தபஸ்வி பொன்காமராஜ் சுவாமிகள் தலைமையில்
மதுரையில் இருந்து வந்த
புனித புண்ணிய பாதயாத்திரையினரின் சிறப்பு யாகம் மற்றும் பௌர்ணமி பூஜை நடைபெற்றது.
கடந்த 34 ஆண்டுகளாக மதுரை மாநகர் யோகிராம் சுரத்குமார் குருசேத்திரம் ஆலயத்தில் இருந்து காணிமடம் நோக்கி புனித புண்ணிய பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி 35 வது ஆண்டிற்கான பாதயாத்திரையானது
கடந்த மாதம் 10 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 5 மணிக்கு தொடங்கியது.
இதனை காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் தொடங்கி வைத்தார். பாதயாத்திரை அருப்புக்கோட்டை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர் வழியாக நேற்று காலை அஞ்சுகிராமம் வந்து சேர்ந்தது.
அஞ்சுகிராமத்தில் காணிமடம் மந்திராலய குரு நாமரிஷி தபஸ்வி பொன்காமராஜ் சுவாமிகள் தலைமையில் பாதயாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டு,
மந்திராலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து பரம்பொருள் யோகி ராம் சுரத்குமார் விக்கிரகத்திற்கு களபம், பால், பழம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு துளசி, ரோஜா, பிச்சி, முல்லை, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களால் செய்யப்பட்ட பழமாலைகளும் அணிவிக்க்ப்பட்டது.
பின்னர் பகல் ஒரு மணிக்கு அருப்புக்கோட்டை பாதயாத்திரை குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற அன்னதானத்தை மந்திராலய குரு நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் துவக்கி வைத்தார்.
மாலை 3 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இரவில் நடைபெற்ற பௌர்ணமி பூஜையில் நிலாமுற்ற பூஜை மற்றும் சிறப்பு யாகத்தை நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் நடத்தினார். இதில் மதுரை, அருப்புக்கோட்டை, வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
போட்டோ ஃபுட் நோட்
காணிமடம் மந்திராலயத்தில் நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் தலைமையில் நிலா முற்ற பூஜை நடந்தது.