தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. முத்தாரம்மன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முத்தாரம்மன் டிராவல்ஸ் உரிமையாளர் குடும்பத்தினர் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து இவர்கள் செட்டியா பத்தில் உள்ள ஐந்து வீட்டு சுவாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலை மாடசாமி கோவிலிலும் அவர்கள் வழிபட்டனர். முத்தாரம்மன் டிராவல்ஸ் குரூப் திசையன்விளையில் இருந்து சென்னைக்கு தினசரி 4 பேருந்துகளை இயக்கி வருகிறது. தொழில் செழிக்கவும் குடும்ப நலனுக்காகவும் தங்கள் நிறுவன பஸ்களில் பயணிக்கும் பயணிகள் நீடூழி வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.