பூதப்பாண்டி – மார்ச் – 06-தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 ஊராட்சிகளில் பொதுமக்கள் வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி போன்றவற்றைஉடனடியாக செலுத்தும் விதமாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றுசிறப்பு வரி வசூல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது அதன்படி நேற்று
வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சி) தங்கராஜ் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஊராட்சி பணியாளர்கள் இணைந்து செண்பகராமன் புதூர் ஊராட்சியில் வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி சிறப்பு வசூல் முகாம் நடத்தப்பட்டது முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வரிகட்டாத நபர்களினுடைய வீட்டிற்க்கு சென்று வரி வசூலித்து வந்தனர்கள்