சென்னை கே.கே.நகர் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்சி பல்கலைகழகத்தில் ஆக்குபேஷனல் தெரபி துறை சார்பில் மாற்று திறனாளிகளுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது. என்பது குறித்து ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இக்கருத்தரங்கிற்கு பல்கலைகழக நிறுவனர் மற்றும் வேந்தர் ராதாகிருஷ்ணன் ஆசியுடன், இடைகால வேந்தர் ப்ரோ வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் சென்னை ஐ.ஐ.டி.யின் சுகாதார தொழில்நுட்பங்களுக்கான தேசிய மையத்தின் தலைவர் சாம்சன் டேனியல் மற்றும் டெல்லி ஐ.ஐ.டி பியூஸ் சென்னா, மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பீச் அண்ட் ஹியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த் சுரேஷ் அம்பலபுழா ஆகியோர் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை எவ்வாறு கையாளலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும்
இயற்கை அல்லது விபத்துகளால் ஏற்படும் ஊனத்தால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நபர்களை சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியுடன்
சக மனிதர்களை போல் வாழ முடியும் என்பதை கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது துணை வேந்தர் நீலகண்டன் ப்ரோ துணை வேந்தர் கிருத்திகா பதிவாளர் சுரேகா,
டீன் அருணாகிரிநாதன், கல்லூரி முதல்வர் தீபா சுந்தரேஸ்வரன் மற்றும் பேராசியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.