இராமநாதபுரம் மே 18-
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பெருமாநேந்தல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் அவரது உறவினர்கள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக இருதரப்பினரும் கொடுத்த புகார்களுக்கு தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு மற்றும் எதிர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதே சம்பவம் தொடர்பாக வேல்முருகன் மீது மற்றொரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கில் புகார் தாரரை ஜாமீனில் விடுவித்ததற்கும் மற்றொரு புகாருக்கு வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கும் தொண்டி காவல் நிலையத்தில் பணி புரியும் சிறப்பு சார்பு ஆய்வாளரான இராமகிருஷ்ணன் என்பவர் முதலில் ரூ.3000/- இலஞ்சமாக கேட்டு பின்னர் ரூ.2000/-மாவது கொடுக்க கேட்டுள்ளார். இந்நிலையி்ல் இலஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிஸில் புகார் செய்தார். இலஞ்ச ஒழிப்பு துறை போலிஸாரின் அறிவுத்தலின் பேரில் இரசாயனம் தடவிய ரூ.2,000/- கொடுத்து மேற்படி சி.சா.ஆ இராமகிருஷ்னை சந்திக்க அறிவுரை வழங்கி தொண்டி பகுதியில் அங்காங்கே மறைந்து இருந்தனர். அப்போது மேற்படி நபர் இலஞ்சம் வாங்கியதை உறுதி செய்த இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.