கோவை ஜன:02
கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதி யில் ஸ்ரீ நாக சாயி மந்திர் சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது
கோவிலுக்கு பல்லாயி ரக்கணக்கான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர். கோவை மாநகர காவல்துறையும் கோவில் நிர்வாகமும் மிக சிறப் பாக பக்தர்களின் கூட் டத்தை கட்டுப்படுத்தி நீண்ட வரிசையில் பக்தர் களை கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.
கோவில் நிர்வாகம் தெரிவிக்கையில் இந்த புத்தாண்டு மிகவும் சிறப்புவாய்ந்த புத்தாண்டாக கருதப்படுகிறது.
பக்தர்களின் வசதிக் கேற்ப எந்தவித இடையூறும் இல்லாமல் சாய்பாபாவை தரிசனம் செய்ய மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல கோவில்களில் பக்தர்கள் தான் உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள் ஆனால் இங்கு மட்டும் சாய்பாபா கோவிலில் புத்தாண்டில் தரிசிக்க வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் 10 ரூபாய் பணம் வழங்குவது மனநிறைவை தருவதாக தெரி வித்தார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ நாக சாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன், பொருளாளர் டாக்டர். என். சர்வோத்தமன், அறங்காவலர்கள்ஜி.தியா கராஜன்,எஸ். சந்திரசேகர், ஜி.சுகுமார் ஆகியோர் விழாவிற்கான சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.