கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர்:ஆக,10, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு குனிச்சி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் G.தீபா வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் முகாமில் துவக்கி வைத்து பேசுகையில்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 7 பயனாளிகள் மருத்துவத் துறையில் பயன் அடைந்துள்ளனர். ரத்தசோகை கண் பார்வை என பல்வேறு பிரச்சனைகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ துறையின் சார்பில் முக்கியத்துவம் அளித்து பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதய நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்துள்ளனர். ஏறக்குறைய 44 நோயாளிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது குறித்து மருத்துவத்துறையால் தொடர்ச்சியாக தீர்வு காணப்பட்டது. வருமுன்னர் காவா தான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக்கெடும் என்னும் திருவள்ளுவரின் குரலுக்கு ஏற்ப பொதுமக்கள் வருமுன்னர் தங்களை காத்துக் கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலமாக மருத்துவத் துறையில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமின் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக பாதிப்புகளை கண்டறிந்து தீர்வு காணப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இம்மாமில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் N.K.R சூரியகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் K.A. குணசேகரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் G.மோகன்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு மருத்துவ முகாம் திட்டத்தில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மகப்பேறு, பரிசோதனை குழந்தைகள் நலம், பொது மருத்துவம் பல் பிரிவு, சித்தா, தோல் பிரிவு, ஸ்கேன் பிரிவு காசநோய் போன்ற நோய்களுக்கு சிறப்பு மூலம் நடைபெற்றது. 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் கண்டறிந்து ரத்தத்தில் கோழிப்பின் அளவு இருதய நோய் கண்டறிதலும் மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனையும் கர்ப்பிணி பெண்களுக்கு முழு பேறு கால பரிசோதனை செய்யப்பட்டது. முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இம்முகாமில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் C.K.சுப்பிரமணி, முருகேசன், அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயகுமாரி, ஊராட்சி செயலாளர் ராஜேஷ், MGNREGS ஒருங்கிணைப்பாளர் K.விவேகானந்தன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முகாமில் எலவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இலவம்பட்டி , அண்ணா நகர், அம்பேத்கர் நகர் வன்னியபுரம், வடக்கமேடு, செல்லரப்பட்டி, தம்மன் வட்டம், வேலு வட்டம், வேல்முருகன் வட்டம், முருகன் கோயில் வட்டம் ,மைக்கா மேடு என முப்பதுக்கு மேற்பட்ட ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் 5க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர்.