தேனி.
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 10வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நேற்று 08-08-24 வியாழக்கிழமை கைத்தறி துறையின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா துவக்கி வைத்து கண்காட்சியினை பார்வையிட்டார்.
1905-ம் ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும் அவர்களின் பெருமையை போற்றவும் தேசிய கைத்தறி நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில்,தேனி மாவட்டத்தில் 10வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேனி ஜக்கம்பட்டி சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், மென்பட்டு சேலைகள், பருத்தி நூல் சேலைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், தலையணை உறைகள்,மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடக்கி வைத்தார்.இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, கைத்தறி ஆய்வாளர்கள் பால முரளிதரன், பிரபாகரன், ஜெயராமன், மற்றும் மதுரை சரக கைத்தறி துறை சங்க பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட செய்தியாளர். அசோக்குமார்.