தேனி அக் 21:
தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்வரும் 22 10 2024 செவ்வாய் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேனி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் யுடிஐடி அட்டை நகல் குடும்ப அட்டை நகல் ஆதார் அட்டை நகல் புகைப்படம் 1 உடன் நேரிடோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப் படுகிறது எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தெரிவித்துள்ளார்