செந்துறை முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அரியலூர்,ஜூன்:29
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட செந்துறை முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணியளவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தலின் பெயரில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து பாதிக்கப்பட்டது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டிடம் கட்டும் விதம் குறித்தும், இத்திட்டத்தில் யார் யார் தகுதி உடையோர் என்பது குறித்தும் எடுத்துக்கோரி விளக்கினார். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் , ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,
அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டும், மற்றும் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டும் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் ரவி அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்