திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளானூர் முதல்நிலை ஊராட்சி ஒன்றியம் கொள்ளுமேடு கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
வெள்ளானூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் அ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஜல் ஜீவன் இயக்கம் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் கூட்டாண்மை மற்றும் ஒழுங்கிணைப்பு பிரிவு குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காட்டூர் கிராமம், ஆர்ச் அந்தோணி நகர், செல்வி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற செயலர் ஜெ.நாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், உட்பட கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.