மதுரை, மேலாண் இயக்குநர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூட்டாண்மை வணிக அலுவலகம் வார இறுதி விடுமுறை நாட்கள், பள்ளி காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி மற்றும் மகாளய அமாவாசை தொடர்ந்து வருவதை முன்னிட்டு 27.09.2024 முதல் 28.09.2024 வரை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 120 பேருந்துகளும், பல்வேறு இடங்களுக்கு (திருச்சி, சேலம், ஈரோடு. கோயம்புத்தூர். திருப்பூர், திருநெல்வேலி. நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு) 75 பேருந்துகளும் மற்றும் 02.10.2024 அன்று காந்தி ஜெயந்தி மற்றும் மகாளய அமாவாசையினை முன்னிட்டு இராமேஷ்வரம். திருசெந்தூர் மற்றும் முக்கிய திருத்தலங்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கவும், மேலும் 29.09.2024 / 02.10.2024 அன்று விடுமுறை மற்றும் மகாளய அமாவாசை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 150 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 100 பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போக்குவரத்துக் கழகம் மூலம் கொடைக்கானல், கொல்லம், மூணாறு. திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, சேலம், நாகர்கோவில், திருச்செந்தூர். நெய்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம். மன்னார்குடி, கடலூர் மற்றும் நாகூர் வழித்தடங்களில் பொது மக்கள் மற்றும் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in/home.html website முன்பதிவு செய்து பயனடையுமாறு தெரிவித்தனர். மேலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும். பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழி காட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் / பொறியாளர்கள் / கண்காணிப்பாளர்கள் / பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி காலாண்டு விடுமுறையில் சிறப்பு
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics