மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன் ஏற்பாடு
ராமநாதபுரம், நவ.28-
திமுக கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் கே.ஜே. பிரவின் தலைமையில் பாரதிநகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, அதனை தொடர்ந்து வாலாந்தரவையில் கழக இருவண்ணக்கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் செஸ்ட் ஏஞ்சலின் மனவளர்ச்சி குன்றியோர் உறைவிடப்பள்ளியில் மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சிகளில் கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர்