தஞ்சாவூர். அக்.4
தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மாளிகையில் கதர் அங்காடியில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கி, மகாத்மா காந்தி உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசும்போது:
நடப்பு ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 1.20 கோடி விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறியீட்டினை அடைவதற்கு பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்கி தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் துயர் துடைக்க வேண்டும் என்றார் விழாவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் கோபாலகிருஷ் ணன் கதர் அங்காடி மேலாளர் நடராஜன் மற்றும் அரசு அலுவலர் கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்