நாகர்கோவில் ஜூன் 26
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகன விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்காணித்து குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் வாகன விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும், தொடர்ந்து விபத்துக்கள் நடக்கும் இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், நாகர்கோவில் மற்றும் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.