ஈரோடு, மார்ச். 11-
சக்திமசாலா நிறுவனத் தின் ஓர் அங்கமான சக்தி தேவி அறக்கட்டளை யின் சார்பாக சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிருக்கான 5 மருத்துவ பரிசோதனை 5 மற்றும் ஆலோசனை ஈரோடு மாமரத்துப்பாளை யம் சக்தி மருத்துவமனை வளாகத்தில் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் துரைசாமி ,சாந்தி துரைசாமி ஆகியோர்
தலைமையில் நடந்தது.
இதில் மகளிர் சிறப்பு மருத்துவர் சுஜாதா செந்தில் வேலு மற்றும் மூலை, நரம் பியல் மருத்துவர் காஞ்சனா ஆகியோர் மருத்துவ பரிசோதனை மற்றும் சமற்றும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பிசியோதெரபி ஆலோ சனை மற்றும் சிகிச்சை, உணவியல் ஆலோசனை மற்றும் இரத்தப் பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ள இந்த முகாமில் உணவும் உடல் ஆரோக்கியம் பற்றிய உளவியல் ஆலோசகரின் விளக்கமும், உடற்பயற்சி யின் நன்மைகள், மூட்டு வலிக்கான காரணங்கள் மற்றும் மனநலமும் உடல் நலமும் என்ற தலைப்பில் கலந்தாலோசனைகள்
நடைபெற உள்ளது.
பெண்களின் ஆரோக்கி யத்தை மேம்படுத்த அன்றா டம் செய்ய வேண்டிய அடிப்படை உடற்பயிற்சிகள் முகாமில் கற்றுத்தரப்படுகிறது.
தோள்பட்டை வலி. முதுகுவலி, மூட்டுவலி, முழங்கால் வலி ஆகிய வற்றிற்கு பயிற்சியுடன் கூடிய இலவச வலி நிவா ரண பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்படுகிறது.