ஈரோடு பிப் 11
ஈரோடு மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர்கான சிறப்பு முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம், அம்மாபேட்டை, அந்தியூர், அத்தாணி, பவானி, சென்னிமலை, சம்பத்நகர், கோபி, கவுந்தபாடி, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி, நம்பியூர், பு.புளியம்பட்டி, சத்தியமங்கலம், சிவகிரி, டி.என்.பாளையம், பெருந்துறை, அரச்சலூர், அவல்பூந்துறை, காஞ்சிக்கோவில், குருமந்தூர், ஈரோடு பஜார் கிளை, சோலார். சூரம்பட்டிவலசு, மாணிக்கம்பாளையம், டி ஜி புதூர் சித்தோடு, மற்றும் குன்னத்தூர் ஆகிய கிளைகள், ஈரோடு கூட்டுறவு நகர வங்கி முனிசிபல் காலனி கிளை மற்றும் சென்னிமலை கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகத்தில் வருகிற13 ந் தேதி அன்றும், ஈரோடு மாவட்ட கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகத்தில் 14.மற்றும் 17 தேதி களிலும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி முனிசிபல் காலனி கிளை மற்றும் சத்தியமங்கலம் கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகத்தில் 20 ந் தேதியும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியின் தலைமையத்தில் 21 ந் தேதியும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி முனிசிபல் காலனி கிளையில் 24 மற்றும் 27 ந் தேதி யும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியின் தலைமையகத்தில் 28 ந் தேதியும் லோன் மேளாக்கள் நடைபெறவுள்ளன.
மேற்படி, கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். கடன் மனுக்களுடன் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், திட்ட தொழில் அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை சமர்பிக்க வேண்டும்.
இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கடன் உதவி பெற்று பயனைடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா கேட்டு கொண்டு உள்ளார்.