தஞ்சாவூர் ஜூன் 22
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மகளிர் உரிமை துறை மற்றும் திருநங்கையர்கள் நல வாரியம் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார் முகாமில் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை போன்றவை தொடர்பான 121 மக்கள் பெறப்பட்டு, இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப் பட்ட துறைஅலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை பயனாளிகளுக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். திருநங்கையர்களுக்கான மருத்துவ முகாமை பார்வையிட்டார் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரவீனா குமாரி, மாவட்ட சமூக நல அலுவலர் லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.