நாகர்கோவில் பிப் 11
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு சிவாலயங்களை, மஹா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய
மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது. ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக கோவிந்தா… கோபாலா… என்ற கோஷம் முழங்க பக்தர்கள் பன்னிரண்டு சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்கிறார்கள்.
சிவன் ஓடி ஒளிந்த பன்னிரெண்டு ஸ்தலங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால், அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது. இவ்வாறு சிறப்புமிக்க சிவாலய ஓட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரியில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் மார்த்தாண்டத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திருமலை 7.45 மணி, திக்குறிச்சி 8.30 மணி,திற்பரப்பு 10 மணி, திருநந்திக்கரை 10.45 மணி, பொன்மனை 11.45 மணி, பன்னிபாகம் மதியம் 12.45 மணி,கல்குளம் 1.30 மணி,மேலாங்கோடு 2 .15 மணி, திருவிடைக்கோடு 2 .45 மணி, திருவிதாங்கோடு3.45 மணி, திருபன்றிகோடு மாலை 5 மணி,திருநட்டாலத்துக்கு 5.30 மணிக்கும் செல்லும்.
அங்கிருந்து மார்த்தாண்டத்துக்கு 6 மணிக்கு சென்றடைகிறது. மொத்த பயண தூரம் 103 கி.மீ ஆகும். பயண கட்டணம் ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஒரு பகுதியில் இருந்தோ அல்லது ஊரில் இருந்தோ குறைந்தது 50 பக்தர்கள் சேர்ந்து சிவாலயங்களை தரிசிக்க வேண்டும் என்றாலும் தனியாக அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து வணிக மேலாளர் ஜெரோலின் சிங் தெரிவித்துள்ளார்.