மதுரை டிசம்பர் 5,
மதுரையிலிருந்து திருவண்ணாமலை திருகார்த்திகைக்கு சிறப்பு பேருந்து
தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், கூட்டாண்மை வணிக அலுவலகத்தின் மேலாண் இயக்குநர் உத்தரவுபடி திருகார்த்திகை
முன்னிட்டு மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், திருவண்ணாமலையில் திருகார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 13 ந்தேதி வருவதை முன்னிட்டு பொது மக்கள் அதிகளவில் மதுரை மற்றும் ச
சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம்(மதுரை)லிட்., மதுரை போக்குவரத்துக்கழக மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவிற்கு 12.12.2024 முதல் 15.12.2024 வரை 300 பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்போக்குவரத்துக்கழகம் மூலம் திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்று வர பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும், முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரிசலையும், கால நேர விரயத்தையும் தவிர்க்கும்பொருட்டு அரசு போக்குவரத்து கழகம் (OTRS) https://www.tnstc.in, TNSTC Mobile App கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்ய
ஏற்பாடுகளை செய்து உள்ளது. மேலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் / பொறியாளர்கள் / கண்காணிப்பாளர்கள் / பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மேலாண் இயக்குநர் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.