நாகர்கோவில் அக் 24
குமரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-
மத்திய மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடிவரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், ஊழியர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள்,ராணுவ ஓய்வூதியதாரர்கள்,மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள்,நவம்பர் 1ஆம் தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, டிஜிட்டல் உயிர்வாழ்சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல்துறையின் கீழ்செயல்படும் “இந்தியாபோஸ்ட்பேமென்ட்ஸ்வங்கி”,ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது FACE RD ஆப் முறையைபயன்படுத்தி, டிஜிட்டல்உயிர்வாழ் சான்றிதழ் ஜீவன்பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவைகட்டணமாக ரூ.70/- தபால்காரரிடம் செலுத்தவேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண்,PPO எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல்ரேகை பதிவு செய்தால், ஒருசில நிமிடங்களில்,டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
2014 ஆம் ஆண்டில் அரசாங்கம் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (ஜீவன் பிரமாண்) அறிமுகப்படுத்தியது. அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், டிபார்ட்மென்ட் டு பென்ஷன் & பென்ஷனர்ஸ் வெல்பர் (DOPPW) மற்றும் இந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி தபால்காரர் மூலம் விழிப்புணர்வு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெறவிரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம்.மேலும் https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது “Postinfo”செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பர் மாதம்1ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சிறப்பு முகாம் நவம்பர் 4ஆம் தேதி நாகர்கோயிலிலும், நவம்பர் 8 தக்கலையிலும் , நவம்பர்16 குழித்துறையிலும் , நவம்பர் 25 வெட்டூர்ணிமடம் ஆகிய அஞ்சலகங்களில் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது