தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் எலுமிச்சை பழதீபம், பூசணிக்காய்தீபம், நெய் தீபம் ஏற்றி சாமியை வழிபட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.