ஜூன் 02,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30.05.2024 ம் தேதி மாலை முதல் மூன்று நாட்கள் கன்னியாகுமரியில் தங்கி இருந்து கடல் நடுவே முக்கடல் சங்கமத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்க்கொள்ள வருகை தந்ததை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருத்தன.
மேலும் பாதுகாப்பு பணியில் குமரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய ஜங்ஷன்கள் மற்றும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அத்துடன் ரோந்து போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பணியின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்ப்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் சீரும் சிறப்புமாக பணியாற்றிய அனைத்து காவல்துறையினரையும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் வெகுவாக பாராட்டினார்.