மத்திய உள்துறை அமைச்சக பதக்கம் பெற்ற மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணியாளருக்கு எஸ் பி பாராட்டு
நாகர்கோவில் செப் 03,
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர் ஜஸ்டின் காவல் பயிற்சி மையத்தில் சிறந்து செயலாற்றியதற்காக கடந்த 23/08/2024 ம் தேதி தமிழக முதலமைச்சரிடம் இருந்து மத்திய உள்துறை அமைச்சக பதக்கம் பெற்றார்.
பதக்கம் பெற்ற அமைச்சுப் பணி கண்காணிப்பாளரை நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.