பரமக்குடி, டிச.4 : பரமக்குடியில் திமுக மகளிர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வைகை ஆற்றின் கரையோரத்தில் 5000 பனை விதைகள் எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணையை செயலாளர், விளையாட்டுத்துறை அமைச்சர் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாவட்ட மகளிர் அணி சார்பாக வைகை ஆற்றின் இரு கரையோரங்களில் 5000 பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது. இதனை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, திமுக நெசவாளர் அணி சார்பில் நேருஜி மைதானத்தில் நடைபெற்ற அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம்,நகர் மன்ற உறுப்பினர்கள் சர்மிளா அக்பர்,மாலிக், கருப்பையா, நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், துணை அமைப்பாளர் கே பி ராஜன், தகவல் தொடர்பு அணி நிர்வாகி நவசக்தி ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படம்
பரமக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பாக வைகை கரையோரத்தில் பனை விதை விதைக்கும் பணியை எம் எல் ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்.