நாகர்கோவில் பிப் 25
நாகர்கோவில், கோட்டாறு பகுதியில் வைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் இணைந்து தென் மண்டல ஜனநாயக உரிமை மீட்பு மாநாடு என்ற தலைப்பில் மாபெரும் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு மாநிலத் துணைச் செயலாளர் பிஜூருல் ஹஃபீஸ் தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் சாதிக் அலி வரவேற்பு வழங்க, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் முஜிப் ரஹ்மான் தொகுத்து வழங்க,
மாநில துணைச் செயலாளர் நெல்லை அ.அப்துல் வாஹித்,, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாகர்கோவில் அமீர்கான் , இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநில துணைச் செயலாளர் குளச்சல் மிஸ்பாஹுல் ஹுதா, தகவல் தொழில்நுட்ப மாநில துணைச் செயலாளர் காயல் சபீர் அலி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நஜீப், நெல்லை மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது சிறப்புரையாற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பாலாஜி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப உதயகுமார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அச. உமர் ஃபாரூக், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாநில செயலாளர் நாகை N. ஜெ சாதிக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பிரச்சார குழு உறுப்பினர் காயல் அஹமது ஷாகிப், தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹிமாம் பாதுஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மஜக அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் கா.அ.மு. சைஃபுல்லாஹ், காயல் ஏ.ஆர். சாகுல் ஹமீது ஆகியோர் கோரிக்கை உரையாற்றினர்.
மாநாட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, கிழக்கு மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி ,மேற்கு மாவட்ட பொருளாளர் நஸ்ருல் கரீம், மாவட்டத் துணைச் செயலாளர் முகமது ராபி , அந்தோணி அலங்காரம் , இளைஞர் அணி மாவட்ட செயலாளர் யாசிர் அரஃபாத், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அபுதாஹிர், நாகர்கோவில் மாநகரச் செயலாளர் மாஹின் இப்ராஹிம், மாநகரத் துணைச் செயலாளர் இடலை சாகுல், மாநகர இளைஞர் அணி சல்மான் பயாஸ், தகவல் தொழில் நுட்ப அணி மாநகர செயலாளர் மன்சூர், தொழிற்சங்க தலைவர் கரீம், கோட்டார் கிளை செயலாளர் நியாஸ், கிளை பொருளாளர் தர்விஸ் மீரான், கிளை துணைச் செயலாளர்கள் அப்துல் லத்தீப் பாதுஷா , அப்துல் காதர் ,கலீல் ரஹ்மான் , நிஸ்தார், மாஜித், சஜித், உள்ளிட்டவர்கள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்..