தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்த சார்பு ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் என். கண்ணன் பாராட்டு.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட கிரேட் காட்டன் சாலையில் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பால்ராஜ் (56) என்பவர் கடந்த 10.05.2024 அன்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் ராஜபிரபு தலைமையில் காவலர்கள் சுடலைமணி, சண்முகையா, கதிரவன், டேவிட் ராஜன் மற்றும் சக்தி மாரிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் களான தூத்துக்குடி எஸ்.எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கந்தசுப்பிரமணியன் (26) மற்றும் தூத்துக்குடி சங்கரப்பேரியை சேர்ந்த பால்சாமி மகன் ஜெயராமன் (35) ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்தனர்.
மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் களை தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக கைது செய்த சார்பு ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசாரை மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் என். கண்ணன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.