ஈரோடு, ஏப். 1
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் மாநில தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் துணைத் தலைவராக டாக்டர். என்.நந்தகோபால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவராகவும் வீரப்பன்சத்திரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
இவரது பதவி காலத்தில் இச்சங்கத்திற்கு தமிழக அரசு 2020-2021ஆம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் சங்கமாகவும், சிறந்த நெசவாளர்கான விருதும் வழங்கி உள்ளது.
ஈரோடு மாவட்ட அனைத்து கைத்தறி சங்கங்களின் சம்மேளனத்தில் மாவட்ட இயக்குனராகவும், ஈரோடு மாவட்ட நூல் மற்றும் சாயக் கூலி நிர்ணய குழு கமிட்டி உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசு ஜவுளி ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது ஈரோடு, கோட்டை செங்குந்த திருமண மண்டபத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும், ஈரோடு மாவட்ட பாக்சிங் அகாடமி துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். தமிழ்நாடு கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க மாநில தலைவராக உள்ளார் மேலும் பல்வேறு தொழில் சார்ந்த அமைப்புகளில் பதவி வகித்து வருகிறார் கொரோனா காலகட்டத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் அத்யாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் வழங்கினார். மாணவ மாணவியருக்கு கல்வி உதவிகள், விளையாட்டு உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். இவரது பொது சேவை மற்றும் சமூக சேவையை பாராட்டி பிராம்டன் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டி கனடா மற்றும் பாரதியார் சமூக கலாச்சார அகாடமி இணைந்து கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் சேவா ரத்னா விருது
வழங்கினர். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில துணைத் தலைவராக வி. எஸ். செங்கோட்டைய முதலியார், ஜெ.சுத்தானந்தம், ஆர்.ஏ.என். முத்துசாமி முதலியார் ஆகியோர் வரிசையில் தற்போது என்.நந்தகோபால் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என்.நந்தகோபால் மாநில துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சங்கத்தின் மாநில, மாவட்ட, மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics