ஈரோடு, நவ. 30
ஈரோடு மகளிர் மற்றும் மகப்பேறு சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோடு சம்பத் நகரில் உள்ள இந்திய மருத்துவ அரங்கில் நடை பெற்றது அப்போது மக ப்பேறு காலத்தில் மருத்துவர்கள் மேற்கொள்ளும் சவால்கள், சிகிச்சை மகப்பேறு நேரத்தில் மரணங்கள் நிகழ்வதால் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் பிறகு ஈரோடு மகளிர் மருத்துவ சங்கத்தின் தலைவர் ரேவதி சதாசிவம் கூறியதாவது
மகப்பேறு சிகிச்சையின் போது ஏற்படும் மரணங்கள் குறித்து மாதந்தோறும் நடைபெறும் தணிக்கை குழு கூட்டத்திற்கு குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதியை நிர்ணயிக்க வேண்டும் இதன்மூலம் ஒரே ஒரு மகப்பேறு மருத்துவர் பணியாற்றும் மருத்துவமனையில் மாற்று மருத்துவரை பணியமர்த்த உதவியாக இருக்கும்
மேலும் மகப்பேறு மரணம் குறித்த தணிக்கை கூட்டத்தில் மகப்பேறு அல்லாத
மருத்துவர்கள் வருவாய்த்துறையினர் இருப்பதால் தங்களின் விளக்கம் ஏற்றுகொள்ளப் படுவதில்லை இதற்கு பதிலாக மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தில் மூத்த மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து கண்டறியப்பட்டால், அவற்றை தணிக்கைக்கு
உட்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை தலைவர் டாக்டர் சரவணன் முன்னாள் தலைவர் டாக்டர் சி என் ராஜா செயலாளர் டாக்டர் அரவிந்த் லோட்டஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் உஷா சகாதேவன் உட்பட கலந்து கொண்டனர்.