கன்னியாகுமரி ஜூலை 16
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள வாறுதட்டு முதிரப்பழஞ்சி பகுதியை சார்ந்த பொன்னப்பன் கீதா இவர்களின் மூத்த மகள் ஆஷிகா என்பவர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 475 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார். காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவியின் வீட்டிற்குச் சென்று மாணவியை நேரில் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளை நிறுவனர் பிரேம் ராஜ் மற்றும் நித்திரவிளை ஜோஸ் தீரஜ் பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் உலக சாதனையாளர் கலை இளமணி தீரஜ் ஆகியோர் இணைந்து கேடயம் மற்றும் புத்தகங்கள் வழங்கி பாராட்டினர்.இந்நிகழ்வில் அன்னை தெரசா அறக்கட்டளையின் பொருளாளர் சூரஜ் மற்றும் கலை ஆர்வலர் ஜோணி அமிர்த ஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.