அஞ்சுகிராமம் பிப்-15
தமிழ்நாடு போக்குவரத்து சார்பாக பள்ளி செல்லும் .மாணவ, மாணவிகள் நலனுக்காக காலை, மற்றும் மாலை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கிராமபுற பள்ளி குழந்தைகள் நலனுக்காக அனைத்து கிராமங்களையும் இணைத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன இந்நிலையில் நாகர்கோவில் டூ அஞ்சுகிராமத்திற்கு கொட்டாரம் வழியாக தடம் என் |C பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் கொட்டாரம், மகாராஜபுரம், வட்டக் கோட்டை, பால்குளம், காணி மடம், கணகப்பபுரம், வழியாக அஞ்சுகிராமம் பஸ் நிலையம்., செல்கிறது. தடம் எண் 1 C பஸ் கொட்டாரத்தில் இயங்கிவரும் அரசு மேல்நிலைபள்ளி மாணவ, மாணவிகளின் கனவு பேருந்தாக உள்ளது. தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கினாலும் பெரும்பாலான மாணவர்கள் பேருந்தில் செல்வது வாடிக்கையா உள்ளது. மேலும் தடம் என்||Cயில்அளவுக்கு அதிகமாக பயணிக்கும் மாணவர்கள் மற்றவர்களுக்கு இடையூராக படிகட்டில் பயணம் செய்கிறார்கள், போக்குவரத்து போலீசார் நடத்துனர், ஒட்டுநர் பல முறை. கூறியும் கேட்காமல், கிண்டலும், கேலியுமாக பயணம் செய்கிறார்கள்.இதனால் பெண் பயணிகள், மற்றும வயதானோர் மிகவும் பாதிக்கப்படுகின்றார். மேலும் எந்த நேரத்த்திலும் அம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே நடத்துனர் மற்றும் ஒட்டுநர் | பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்திட காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக
ஆர்வலர்கள் கூறினர்.