கோவை ஜன:12
கோவை மாவட்டம்
நேரு உள் விளையாட்டு அரங்கில்
இதன் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டிகளை துவக்கிவைத்தனர்.உடன் எஸ்என்எஸ் குரூப் ஆஃப் இன்டஸ்டியூசன்ஸ் நிர்வாக இயக்குனர் நலின் விமல் குமார்,கே ஏ சி புரவலர் டாக்டர் சுமன்,தேசிய தடகள வீரர் கிரிஷ்பீத்தோவன்,கே ஏ சி ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாவட்ட அளவில் நடைபெறும் தடகள போட்டிகளில் 55கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 2000-கும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நிர்வாகிகள் தெரிவிக்கையில் கோவை அத்லெடிக் கிளப் துவங்கி 25 ஆண்டுகள் ஆகிறது .
எனவே இந்த ஆண்டு முழுவதும் வெள்ளி விழா ஆண்டாக கொண்டாடவுள்ளோம். பல தடைகளை தகர்த்து 25 ஆம் ஆண்டுகள் தொடர்ந்து கோவை அத்லெடிக் கிளப் செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆரம்ப காலத்தில் தற்போது வரையிலும் ஒத்துழைத்த அனைவருக்கும் கிளப் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு முதல் நிகழ்ச்சியாக எஸ் என் எஸ் குழுமத்துடன் இணைந்து தடகள போட்டிகளை நடத்துவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.