மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட
தெப்பக்குளம் பகுதியில் தெற்கு மண்டலம் 4 சார்பாக 18 வார்டுகளுக்கு ஒரு வாகனம் வீதம்18 தூய்மை பணி மேற்கொள்ளும் வாகனத்தை தெற்கு மண்டல தலைவர் முகேஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். புகையில்லா போகி மற்றும் பசுமை பொங்கல் கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் 42 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி கார்மேகம், சுகாதார அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர்கள் அலாவுதீன், மாரிமுத்து, ராமநாதன், சரவணகுமார் மற்றும் அவர்லேண்ட் மேலாளர் அரவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்