சென்னை, ஆகஸ்ட் -30, டாடா ப்ராஜெக்ட்ஸ் தொழிலாளர்களுக்கு திறமையுடன் பணியாற்றுவதற்கு அவசியமான திறன் மேம்பாட்டு பயிற்சியும் சான்றிதழும் வழங்குகிறது.
இந்த பயிற்சி முழுமைப் பெற்றதும், கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சில் (சிஐ டீ.சி) மற்றும் ராய்பூர் கலிங்கா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள், டிப்ளோமாக்கள் மற்றும் பட்டங்கள் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.
டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் சி.ஹெச்.ஆர்.ஒ. ரித்தேஷ் பிரதாப் சிங் இது குறித்து கூறுகையில்:
டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்காக, கட்டுமான நடைமுறைகளில் நிலைத்தன்மை மற்றும் செயல்திறன் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் கட்டுமானம் நடக்குமிடத்தில் நிலையான மேலாண்மையை பின்பற்ற இந்த முன்முயற்சி வலியுறுத்துகிறது. இப்பயிற்சித் திட்டம் கட்டுமானத் துறைக்குள் திறன் மேம்பட்ட பணியாளர்களை அரவணைத்து, அத்துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இப்பயிற்சியை பெற்றவர்கள் இந்தியா முழுவதும் மேட்ரோ கட்டுமானம், இதர டாடா கட்டுமானம் நடைபெறும் இடங்களில் பணியாற்ற முன்னுரிமை அளிக்கபடும்.
கட்டுமானத் துறையின் செயல்படும் முன்களப் பணியாளர்கள் விரிவான வகையில் வேலைகளை ஒருங்கிணைத்து வழங்கப்படும் பயிற்சியிலிருந்து பயனடைவார்கள். மேலும், இத்துடன் வகுப்பறைக் கற்றல் அனுபவத்தின் மூலம் இணைத்து பணியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதால் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறது என்றார்.