சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கென மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் 2024-25 மூலம், ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் கீழ் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.
பெரிய கருப்பன் , மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலையில் அடிக்கல் நாட்டும் பணியினை துவக்கி வைத்தார். உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரை ஆனந்த், சிவகங்கை நகராட்சி ஆணையாளர் கி.சு.கிருஷ்ணராம், சிவகங்கை நகர்மன்ற துணைத்தலைவர் எம்.கார்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், 17-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.இராமநாதன், சிவகங்கை நகராட்சி பொறியாளர் முத்து உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.