சிவகங்கை உதய தின விழா சிவகங்கை அரண்மனையில் மேதகு ராணி* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதல் முறையாக இந்த விழாவில் சிவகங்கை நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக செயல்பட ஏழு நபர்களை கௌரவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அந்த ஏழு நபர்களில்
சிவகங்கை நகரில் மதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் சமூக பணி செய்ததற்காக சிவகங்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழக மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அப்துல் முத்தலிபை தமுமுகவின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா மற்றும் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினர்.