தஞ்சாவூர். அக்.7
தஞ்சாவூரில் மக்கள் சக்தி இயக்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் டாக்டர் ராச லிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் பாஸ்கரன் பொருளாளர் நீலமேகம் மாநில துணை தலைவர் பெரியசாமி வழக்கறிஞர் அசோகன் துணை செயலாளர் இளங்கோ சுகுமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் முருகானந்தன் அனைவரையும் வரவேற்றார்.
சேவை சிறப்பாக செய்த பண்பாளர்களுக்கு பாராட்டினர்.தஞ்சாவூர் யோகம் செழியனுக்கு திருவள்ளுவர் விருது, குடந்தை மினர்வா பள்ளி தாளாளர் மேகநாதனுக்கு டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி விருதும், மக்கள் சக்தி இயக்க பண்பாளர் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கந்தசாமிக்குபேராசிரியர் சண்முகம் விருதும் வழங்கப்பட்டது.
மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் மாநில பொது குழு தீர்மானங்களை வாசித்தார் இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் படிப்படியாக பூரணமது விலக்கு என்ற இலக்கு எட்டவும் போதை பொருட்களை பழக்கத்தை கட்டுப்படுத்தவும் உரியநடவடிக்கை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.நூலகர்நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில ஆலோசகர் ஜெயக்குமார் மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார் பெரம்பலூர், முத்துசந்தானந்தம், கரூர், சேகர் மதுரை, சந்திரசேகரன் கோவை, முத்தமிழ் அரசன் சிவகெங்கை தமிழ் அரசன், தல்லாகுளம் முருகன், கந்தசாமி தூத்துக்குடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.