வேலூர்=08
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் நல்வாழ்வு மன்றத்தில் நடைபெற்ற வேலூர் சித்தார்த்தா சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா உலக பொதுமறை திருக்குறளை மைய கருத்தாக கொண்டு நடத்தப்பட்ட விழாவிற்கு பள்ளியின் முதல்வர் சித்தார்த்நம்பி தலைமை தாங்கினார் .சிறப்பு விருந்தினர் கூட்டுறவு சங்கங்களின் வேலூர் மண்டல இணை பதிவாளர் திருகுண அய்யப்பதுரை விழாவில் கலந்து கொண்டு திருக்குறளின் சிறப்புகள் பற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் கேடயங்களும் பள்ளியின் சார்பில் வழங்கினர் .சிறப்பாக கல்வி பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களும் கேடயங்களும் சிறப்பு விருந்தினர் திருகுன அய்யப்பதுரை வழங்கினார் விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள், பலர் கலந்து கொண்டனர்.