தருமபுரி நகரில் 1980- ல் நரேந்திரன் அவர்களால் ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் துவக்கப்பட்டு தற்போது வெங்கடேஷ் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் எங்கும் கிடைக்காத தரமான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான பட்டு ரகங்களில் ஒரு மாபெரும் புரட்சி செய்து வருகின்றார். ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்.
ஸ்ரீ மகாலட்சுமி நிறுவனம் பட்டுக்கூடு முதல் பட்டுப் புடவை வரை சொந்தமாக உற்பத்தி செய்து தரமான பட்டுப் புடவைகளை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் வழங்கி மாபெரும் பட்டு புரட்சியை தருமபுரியில் நிகழ்த்தி வருகின்றோம். எங்கள் ஸ்ரீ மகாலட்சுமி நிறுவனத்தின் மூலம் மாதம் 2,000 கிலோ பட்டு நூல் வரை சொந்தமாக உற்பத்தி செய்து கூட்டுறவு சங்கங்களுக்கு பட்டு நூலை விநியோகித்து வருகின்றோம். இதனை பாராட்டி எங்கள் நிருவனத்ற்கு தமிழ்நாடு அரசால் 1987-ல் மாநில அளவில் பட்டு நூல் உற்பத்தியில் சாதனை படைத்த ஸ்ரீ மகாலட்சுமி நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது.
நாங்கள் காஞ்சிபுரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பட்டு நூல் ஏற்றுமதி செய்து வருகின்றோம். எங்கள் நிறுவனத்தில் ரூ. 5,000 முதல் ஒரு லட்சம் வரை மதிப்புள்ள சுத்தப்பட்டு, வெள்ளி மற்றும் தங்க சரிகைகளால் ஆன பட்டுப் புடவைகளை வாடிக்கையாளர்களுக்கு தரமாகவும், குறைந்த விலையிலும் வழங்கி வருவதாக வெங்கடேஷ் தெரிவித்தார்.
. அதனைத் தொடர்ந்து இந்த வருடம் தீபாவளி மற்றும் பொங்கல் விற்பனையில் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில். வாடிக்கையாளர்களை பட்டாயா மற்றும் பாங்காக் உள்ளிட்ட வெளிநாடு இன்ப சுற்றுப்பயணம் செல்ல 10 சிறந்த வாடிக்கையாளர்களுக்கும், இந்தியா நாட்டிற்குள் சுற்றுலா செல்லும் வகையில் 10 சிறந்த வாடிக்கையாளர்களையும், தமிழ்நாட்டிற்குள் 10 சிறந்த வாடிக்கையாளர்கள்தேர்வு செய்து, மொத்தம் 30 சிறந்த வாடிக்கையாளர்களை எங்களது சொந்த செலவில் சுற்றுலா அழைத்து செல்ல எங்கள் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த சுற்றுலா செல்லும் வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுக்கும் குலுக்கல்,வாடிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் என்றும் , அன்று அனைத்து வாடிக்கையாளர்களும் குலுக்கலில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைப்பதாக ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் நிறுவனத்தின் நிறுவன மேலாளர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
மேலும் பட்டில் சாதனை படைத்து வரும் நாங்கள் அனைத்து வகையான ரெடிமேட் வரிசையிலும் நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு தரமாகவும், குறைந்த விலையிலும் , ஒரு குடும்பத்திற்கு தேவையான சிறுவர் முதல் ஆடவர், மகளிர் என அனைத்து வகை ரெடிமேட் துணிகளையும் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்தாக ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவன மேலாளர் வெங்கடேசன் தெரிவித்தார்.