ஈரோடு நவ. 29
தொழில் நிறுவனங்களின் வாடகை கட்டிடங்களுக்கு18 சதவீதம் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும் என கடந்த அத் டோபர் மாதம் 10-ந்தேதி முதல் மத்திய அரசு அமுலாக்கி உள்ளது. இதனால் அனைத்து வணிக நிறுவனத்தினரும் கடுமையாக பாதிக் -கப்படுவார்கள் என்பதால் இந்த வரி விதிப்பை கண்டித் தும், 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதித்து உள்ளதை உடனடியாக ரத்து செய் யக்கோரியும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் கடைய டைப்பு போராட்டம் நடத் தப்போவதாக பல்வேறு சங் கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் ராஜமா ணிக்கம் நிருபர்களுக்கு கூறிய
தாவது:-
இந்த 18 சதவீத ஜி எஸ் டி வரியினால் சிறு குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படும். மேலும் இந்த வரி உயர்வு கார்ப்பரேட் மயமாக்கும் சூழலை உருவாக்கும் மேலும் இது நம் நாட்டின் பாரம்பரிய கூட்டு குடும்ப தொழில் எனும் கட்டுமானத் தையே சிதைவுக்கு வழிவகுக் கும். எனவே இந்த வரி வரிப்பு முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக் கையை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள டெக்ஸ்டைல், ஆட் டோமொபைல், கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் வணிக நிறுவனங்களை சேர்ந்த 75 சங்கங்களும் இந்த ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள் ளனர்.
மஞ்சள் மார்கெட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள் ளது. இந்த போராட் டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் மூடப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பொது செயலாளர் கேரவிச்சந்திரன் பொருளாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.