தருமபுரி. 04.10.24
தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம்
மழைக்காலங்களில் காவிரியில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து வரும்பொழுது, அந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூரில் நிரம்பி பின்பு வீணாக கடலில் சென்று கலக்கிறது .
இதனை தடுக்கும் வகையில் காவிரியில் வரும் உபரி நீரை ஒகேனக்கல் பகுதியில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு அதனை நீரேற்றம் செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 10 லட்சத்துக்கும் மேலான கையெழுத்து பொதுமக்களிடம் விவசாயிகளிடம் பெற்று ,
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.
பின்பு இதனை வலியுறுத்தி திமுக அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்த நிலையில், அனைத்து கட்சிகளும் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தது.
இதனையடுத்து இன்று காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றுக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அரை நாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுபட்டிருந்தது.
அதன்படி இன்று காலை முதல் நடைபெற்ற போராட்டத்தை யொட்டி தருமபுரி மாவட்டம் தருமபுரி நகரம் ,அரூர் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ,கடத்தூர், பாலக்கோடு, பென்னாகரம் காரிமங்கலம் நல்லம்பள்ளி, மொரப்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒரு சில கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் பாமகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டிருந்தன.
கடத்தூர் பொம்மிடி பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மாநில உழவர் பேரியக்கத்தின் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏராளமான பங்கேற்றனர் .அவர்கள் காவிரி உபநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தையொட்டி தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.