மேலநீலிதநல்லூர் ஸ்ரீ சிவஞான வெளியப்ப சாஸ்தா கோயிலில் சிவராத்திரி விழாவில் பக்தர்களுக்கு
3000 கிலோ பழங்கள் மற்றும் நீர், மோர்
ராஜா எம்எல்ஏ வழங்கினார்
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி
மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் மேல நீலிதநல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிவஞான வெளியப்ப சாஸ்தா கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு தரிசனம் செய்த பக்தர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பழங்கள் நீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேலநீலிதநல்லூர் கிழக்கு
ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு ரூ60ஆயிரம் மதிப்பில் 3000 கிலோ தர்பூசணிபழங்கள் மற்றும்
2ஆயிரம் லிட்டர் மோர் மற்றும்
5_ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் மேலநீலிதநல்லூர் கிளைக் கழகச் செயலாளர் மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன்,ஆத்மா சேர்மன் கணேசன்,
மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன்,
மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி,
மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கணேசன், கிளைக் கழகச் செயலாளர் பாபு,
ஒன்றிய பிரதிநிதி நாட்டாமை வெள்ளத்துரை, முருகன், ஒன்றிய விவசாய அணி ராமர்பாண்டியன், பொன்னுப்பாண்டியன், ஒன்றிய தொண்டரணி பழனிவேல் முருகன்,
ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி காளை,
ஒன்றிய மாணவர் அணி மணிகண்டன்,
ஒன்றிய சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தாமஸ், அவைதலைவர் கருப்பசாமி, விஜயகுமார், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.