செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் கிராமத்தில்
கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது…
அதன் அடிப்படையில்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளன்று பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரை போட்டி, மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களையும் ஊக்குவிக்கவும், மேலும் பல கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வமூட்டும் வகையில் முன்னாள் மாணவர்கள், தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் தேசிய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போட்டிகளில் பங்கு பெற்ற 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதுபோன்று மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்று நம் அரசுப் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சதுரங்கப்பட்டினம் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.