திண்டுக்கல் சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் பிரதோஷம் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது இதில் நல்லெண்ணெய், அரிசிமாவு, திருமஞ்சன பொடி, வாசனைதிரவியம், பால்,தயிர், எலுமிச்சம்பழச்சாறு, பழங்கள், சர்க்கரை, பஞ்சாமிர்தம், தேன்,இளநீர், விபூதி, சந்தனம்,பன்னீர், அன்னம், ஜலம்,உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் சிவலிங்கத்திற்கும், நந்திதேவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 2025-ம் ஆண்டு முதல் சனி பிரதோஷ சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை பூசாரிகள் குணசேகரன் நாகராஜ் வடிவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பிரதோஷ வழிபாட்டிற்கு வந்திருந்த
பக்தர்களுக்கு வெள்ளிமலையான் அன்னதான குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.